ஹாலிவுட்-ல் அராபியர்கள்

 

 
ஹாலிவுட் படங்களைப் பார்க்கும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம் தான். சாஃட்வேர் தொழில்கள் கணிசமான இளைஞர்களின் வாழ்கைத் தரத்தினை உயர்த்திவிட்டது. திரையரங்கு கொத்துகளும் (Multiplex) ஆங்காங்கே முளைத்துவிட்டன.

ஜேம்ஸ்பாண்ட் (James Bond) போன்ற முதலாளித்துவ வாழ்க்கையை தூக்கிப் பிடிக்கும் படங்கள் முதல், சாதாரண குழந்தைகளுக்கான கார்டூன்கள் வரை அப்படங்களில் வரும் வில்லன்கள் அதிகபட்ச வாய்ப்புகளுடன் அவர் ஒரு கருப்பராகவோ, ரஷ்யனாகவோ அல்லது ஒரு இஸ்லாமிய மத அடையாளங்களுடனோ அல்லது சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளில் உள்ளவராகவோ இருப்பார்.

பழைய ரோஜர்-மூர் (Roger Moore) ஜேம்ஸ் பாண்டாக நடித்த படங்களிலும் இதே கதைத்தான். பியர்ஸ் ப்ராஸ்னன் (Pierce Brosnan) நடித்த படங்களிலும் இதே கதைத் தான். ஸ்பீல்பர்க் (Steven Spielberg) படங்களும் விதி விலக்கல்ல. தனது நிற மக்களான யூதர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை மக்களுக்கு சொல்ல ஷின்ட்லர்ஸ்-லிஸ்ட் (Schindlers List) எனும் திரைப்படத்தில் படம் பிடிக்கும் அவர், தனது திரைப்பட தொடரான இண்டியான-ஜோன்ஸ்-ல் (Indiana Jones) பல கலாச்சாரங்களையும் மக்களையும் தாக்கி எடுத்திருப்பார். அர்னால்டு-ஸ்வாஸ்னேகர் நடித்த படங்களிலும், சில்வஸ்டர்-ஸ்டாலோன் நடித்த படங்களிலும் வில்லனைப் பொறுத்த இலக்கணம் இதுதான். ராம்போவினயும், ட்ரூ-லைஸ்-யினையும் மறந்து இருக்க மாட்டீர்கள். மேலும் போதை பொருட்கள் பற்றிய காட்சிகள் அல்லது சதித்திட்டம் தீட்டப்படும் காட்சிகள் ஆகியவைகள் திரைபடங்களில் வந்தால், அந்த காட்சியில் சம்பத்தப் பட்டவர்கள் வெள்ளையர்களாக இருந்தாலும் கூட, இந்த காட்சிகள் நடக்கும் இடத்தில் தூரத்தில் ஒரு அராபியரும் (சகிதம் அவர்களின் கலாச்சார உடையில்) தென்படுவதுபோல் பார்த்துக் கொள்வார்கள்.

மேலும் மேலைநாட்டுக் கலாசாரத்திற்கு மாறுபட்ட கலாச்சாரம் உள்ள நாடுகளில் ஏதாவது ஒரு பிரச்சனையை பற்றிய படம் எண்று வைத்துக்கொள்வோம். அப்படங்களில் அப்பிரச்சனைகளை யார் வந்து தீர்த்து வைப்பாரெனில், ஒரு வெள்ளை நிறத்தினைச் சேர்ந்த மேலை நாட்டுக்காரராகவே இருப்பார். 🙂 அப்பிரச்சனைகள் ஆஃப்கானிஸ்தானத்தில் இருந்தாலும் சரி, லைபீரியா, சியராலியோன், கென்யா, சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் நடந்தாலும் சரி. அல்லது பர்மா, சீனா, கொரியா போன்ற ஆசிய நாடுகளானாலும் சரி. ஒரு வெள்ளையர் வந்து அந்த நாட்டு இனத்தினைச் சேர்ந்த வில்லன்களிடமிருந்து அந்த நாட்டு மக்களைக் காப்பாற்றுவார். அது தான் இலக்கணம்.

தீயவர்களைச் சித்தரிப்பதில் மிகச் சன்னமாகவாவது இது போன்ற காட்சிகள் வரும். (இதைத் தான் இயக்குனர் ஷங்கர், தனது வலதுசாரி தேசியவாத சங் சித்தாந்தத்தில் அமைந்த “அன்னியன்” எனும் திரைப்படத்தில் கையாண்டு உள்ளதாக எனது நண்பன் கூறுவான். நான் அப்படத்தினைப் பார்க்க வில்லை.)

Categories: Uncategorized | Leave a comment

Post navigation

Leave a comment